Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

விண்வெளியில் இருந்து ஐபோனில் பதிவான பசிபிக் பெருங்கடலின் அற்புத காட்சி

03 Aug 2026, 11:48 AM
பார்வைகள்: 180
விண்வெளியில் இருந்து ஐபோனில் பதிவான பசிபிக் பெருங்கடலின் அற்புத காட்சி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து சாதாரண ஐபோன் மூலம் பசிபிக் பெருங்கடலைப் படம் பிடித்த நாசா விண்வெளி வீரரின் புகைப்படம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாசாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்தின் கப்போலா (Cupola) கண்காணிப்பு பகுதியிலிருந்து, எந்தவித தொழில்முறை டிஜிட்டல் கேமராவும் பயன்படுத்தாமல், சாதாரண ஐபோன் மூலமே இந்த அரிய காட்சியை பதிவு செய்துள்ளார்.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், நீல நிறத்தில் பரந்து விரிந்துள்ள பசிபிக் பெருங்கடலின் அழகிய தோற்றம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

பொதுவாக விண்வெளி வீரர்கள் உயர்தர கேமராக்களைப் பயன்படுத்தி பூமியின் காட்சிகளை பதிவு செய்வது வழக்கம். ஆனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போனான ஐபோன் மூலம் இத்தகைய தரமான புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியின் மற்றொரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், பூமியின் இயற்கை அழகையும், நவீன ஸ்மார்ட்போன் கேமராக்களின் திறனையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.