Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

உதயநிதி ஸ்டாலின் கைது; நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்

04 Aug 2026, 12:29 PM
பார்வைகள்: 141
உதயநிதி ஸ்டாலின் கைது; நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற நுழைவாயிலில் திரண்ட அவர்கள், "கைது செய்யாதே... கைது செய்யாதே... உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாதே" என முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை ஒருவர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கைது நடவடிக்கையின்போது, நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு அருகில் வசிக்கும் நடிகரும், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், தனது வீட்டின் மாடியில் இருந்து அந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.