Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

தாய்லாந்து அரசு பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு

07 Aug 2026, 12:44 PM
பார்வைகள்: 284
தாய்லாந்து அரசு பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிற்கு வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நொந்தபுரி மாகாணத்தில் அமைந்துள்ள டெப்சிரின் நொந்தபுரி அரசு உயர்நிலைப் பாடசாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் சிலர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக பாடசாலையைச் சுற்றிவளைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராயல் தாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதமும் தெற்கு தாய்லாந்தில் 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடமிருந்து துப்பாக்கியை அபகரித்து அரசு அலுவலகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த