Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
பொழுதுபோக்கு

🎬 பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்: ராம் சரண் நடிப்பில் “பெத்தி” 11 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு?

15 Jun 2026, 01:08 PM
பார்வைகள்: 1,639
🎬 பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்: ராம் சரண் நடிப்பில் “பெத்தி” 11 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு?

சென்னை: இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகிய “பெத்தி” திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.வெளியான முதல் நாளிலேயே “பெத்தி” உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து கவனம் ஈர்த்தது. இந்நிலையில் படம் தொடர்ந்து 11 நாட்களை கடந்துள்ள நிலையில், மொத்த வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, “பெத்தி” திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ. 315 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், தற்போதைய வசூல் நிலவரத்தின் அடிப்படையில் வெற்றி பாதையில் நகர்ந்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.படத்தின் இறுதி வசூல் எவ்வளவு இருக்கும் என்பது அடுத்த நாட்களின் திரையரங்க வரவேற்பை பொறுத்தே இருக்கும் என கூறப்படுகிறது.

 
 

புகைப்பட தொகுப்பு (Gallery)