Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

உறக்கத்திலேயே உயிரிழந்த இளம் நடிகை அனன்யா ராஜ்; ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியான அதிர்ச்சி தகவல்

17 Aug 2026, 10:43 AM
பார்வைகள்: 420
உறக்கத்திலேயே உயிரிழந்த இளம் நடிகை அனன்யா ராஜ்; ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியான அதிர்ச்சி தகவல்

மும்பையைச் சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் தனது 27-வது வயதில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘7 Hours to Go’, ‘The Final Exit’, ‘Ghost’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் அனன்யா ராஜ். இந்தி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு இசை வீடியோக்களிலும் அவர் தோன்றியுள்ளார். தெலுங்கில் வெளியான ‘Thaggede Le’ மற்றும் மும்மொழி திரைப்படமான ‘Madrasi Gang’ ஆகியவற்றிலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், அனன்யா ராஜ் உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சமூக வலைதளப் பதிவு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவர் கடந்த ஜூலை 15-ஆம் தேதியே உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அனன்யா ராஜ் உறக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவு குறித்து உடனடியாக அறிவிக்காமல், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு குடும்பத்தினர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இளம் வயதிலேயே அனன்யா ராஜ் உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.