Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம்: சீனா எச்சரிக்கை

28 Aug 2026, 11:55 AM
பார்வைகள்: 137
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம்: சீனா எச்சரிக்கை

 நேபாளத்தில் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதிப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, அங்கு புதிய ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த ஏரியில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளதால், அது உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோச்சென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த புதிய ஏரி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏரியில் தேங்கியுள்ள நீர் திடீரென பெருக்கெடுத்து வெளியேறினால், நேபாளத்தின் பல பகுதிகளில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மற்றுமொரு பேரிடர் உருவாகக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக நேபாள அரசுக்கு சீனா தகவல் வழங்கியுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பேரிடர் ஏற்படும் அபாயம் நிலவுவதால், நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.