Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

சுந்தர் பிச்சையின் பட்டமளிப்பு உரைக்கு மாணவர்கள் எதிர்ப்பு: நடுவே வெளியேறிய நூற்றுக்கணக்கானோர

16 Jun 2026, 10:36 AM
பார்வைகள்: 168
சுந்தர் பிச்சையின் பட்டமளிப்பு உரைக்கு மாணவர்கள் எதிர்ப்பு: நடுவே வெளியேறிய நூற்றுக்கணக்கானோர

அமெரிக்காவின் Stanford University பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற Sundar Pichai உரையாற்றத் தொடங்கியபோது, நூற்றுக்கணக்கான மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நிகழ்விடத்தை விட்டு வெளியேறினர்.பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை மேடையேறியதும், சில மாணவர்கள் “Free Palestine” என கோஷமிட்டதுடன், பதாகைகளை ஏந்தியவாறு அரங்கிலிருந்து வெளியேறினர். இந்தப் போராட்டம், இஸ்ரேல் அரசாங்கத்துடன் கூகுள் நிறுவனத்துக்கு உள்ள தொழில்நுட்ப ஒப்பந்தங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனது உரையைத் தொடர்ந்து நிகழ்த்திய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதங்களைத் தவிர்த்து, மாணவர்களின் எதிர்காலத் தேர்வுகள் மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிட்டார்.இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதுடன், பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நடத்திய முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையாகவும் கவனம் பெற்றுள்ளது.