Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

‘கருப்பசாமி இறங்கியதாக’ கூறி ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி

08 Sep 2026, 11:44 AM
பார்வைகள்: 272
‘கருப்பசாமி இறங்கியதாக’ கூறி ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி

திருப்பத்தூர் அருகே தங்களுக்கு ‘கருப்பசாமி இறங்கியுள்ளதாக’ கூறி, கணவனும் மனைவியும் கடந்த நான்கு நாட்களாக ஆடைகளின்றி ஊருக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டிற்குள் வினோதமான முறையில் பூஜைகள் செய்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக ஆடைகளின்றி தெருக்களில் சுற்றித்திரிந்த அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இது தொடர்பில் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்போது, தங்களை எதிர்த்தால் அனைவரும் தடம் தெரியாமல் அழிந்துவிடுவார்கள் எனக் கூறி, தம்பதியினர் பொதுமக்களை சபித்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தாங்கள் சாமியாடும் காட்சிகளை மொபைல் தொலைபேசியில் நேரலையாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்குமாறு பொதுமக்களிடம் வற்புறுத்தி அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள், தம்பதியினரை மடக்கிப் பிடித்து கயிறுகளால் கட்டி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அங்கு விரைந்த பொலிஸார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தம்பதியினரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.