Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

இந்தியா - ஸ்லோவாக்கியா உறவு புதிய உயரத்திற்கு: 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

16 Jun 2026, 10:43 AM
பார்வைகள்: 211
இந்தியா - ஸ்லோவாக்கியா உறவு புதிய உயரத்திற்கு: 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் நரேந்திர மோடியின் ஸ்லோவாக்கியா அரசுமுறைப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவான கூட்டாண்மையாக மேம்படுத்த இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.இந்திய பிரதமர் ஒருவர் முதன்முறையாக ஸ்லோவாக்கியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தலைநகர் பிரடிஸ்லாவாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் போது எரிசக்தி, ஆட்டோமொபைல், ரயில்வே, நவீன உற்பத்தி மற்றும் பசுமை தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன. மேலும், இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, இடம்பெயர்வு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, உயர்கல்வி மற்றும் குவாண்டம் தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கிய 11 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகின.இந்த ஒப்பந்தங்கள், இந்தியா - ஸ்லோவாக்கியா உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.