Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை விஜய், திரிஷா நேரில் ரசித்தனர்

13 Sep 2026, 10:20 AM
பார்வைகள்: 202
நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை விஜய், திரிஷா நேரில் ரசித்தனர்

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் தளத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை நடிகை திரிஷா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், இன்று அஜித்குமார் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பச்சைக்கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்ததுடன், இருவரும் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதனிடையே, அஜித்குமாரின் அழைப்பின் பேரில் நடிகை திரிஷாவும் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்திற்கு வருகை தந்துள்ளார்.

நடிகை ராதிகாவுடன் திரிஷா பிரிட்டனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் இணைந்து அஜித்குமாரின் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இருவரும் இணைந்து பந்தயத்தை பார்வையிட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.