Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

“பாகிஸ்தானை நம்ப முடியாது” – இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கருத்து

16 Jun 2026, 01:50 PM
பார்வைகள்: 193
“பாகிஸ்தானை நம்ப முடியாது” – இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கருத்து

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார், பாகிஸ்தான் குறித்து கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் ஒரு ஊடகப் பேட்டியில் பேசுகையில், “பாகிஸ்தானையும் பாகிஸ்தானியர்களையும் நாங்கள் நம்பவில்லை” என்று கூறியுள்ளார்.அவர் மேலும், பாகிஸ்தானின் அணுகுமுறையும், யூதர்களுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் முன்பு வெளியிட்ட கருத்துகளும் கண்டிக்கத்தக்கவை எனத் தெரிவித்தார். இதுபோன்ற காரணங்களால் நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்பு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இஸ்ரேல் குறித்து சமூக வலைதளத்தில் கடுமையான கருத்துகளை வெளியிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு இஸ்ரேல் தரப்பில் எதிர்வினையும் வெளியிடப்பட்டிருந்தது.இந்த பின்னணியிலேயே ருவன் அசாரின் தற்போதைய கருத்துகள் வெளிவந்துள்ளன.