கச்சத்தீவு கதையை விடுங்கள்....

user 09-Sep-2025 இலங்கை 109 Views

தவெக கட்சி தலைவர் விஜயை விட பலம் வாய்ந்தவர்கள் ஆட்சி செய்தும் கச்சத்தீவை மீட்க முடியாமல் போனதாகவும் கச்சதீவில் அரசியல் நாடகத்தை முன்னெடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறுகையில்

கச்சத்தீவு என்பது இலங்கை அரசாங்கமும் இந்தியாவின் மத்திய அரசாங்கமும் பேச வேண்டிய விடயமாகும்.

 

விஜயை விட பலம் வாய்ந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த போதும் கச்சத்தீவை பெற முடியவில்லை. கச்சதீவில் ஒரு பிரச்சினையும் இல்லை.

இந்த அரசியல் நாடகத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த சஜித் கட்சி எம்பி முஜிபுர் ரஹ்மான் , அரசாங்கம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள அறுகம்குடாவிற்கு சென்று பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி