யாழ்ப்பாணத்தில், கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் தனது நீண்டநாள் காதலனை கைவிட்டு கனடாவில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருடன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து, குறித்த மாணவியின் காதலன் அவரது வீட்டுக்குச் சென்று விளக்கம் மற்றும் நியாயம் கோர முயன்றுள்ளார்.
இதன்போது, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காதலன் தாக்குதலுக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் பேரில், சம்பந்தப்பட்ட காதலன் பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காதலன் யாழ் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகன் எனவும், அவர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவிக்கு தங்கநகைகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பரிசுப்பொருட்களை வழங்கியதுடன், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளையும் தனது சொந்தச் செலவில் செய்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.