Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

16 Jun 2026, 01:55 PM
பார்வைகள்: 204
பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

நோர்வே இளவரசி மெட்டே மேரிட்டின் 29 வயது மகன் மரியஸ் போர்க் ஹோய்பிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.250 எண் கொண்ட நீதிமன்ற அறையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மற்ற இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்தது. எனினும், பிற குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஹோய்பி நேரில் நீதிமன்றத்தில் இல்லை; அவர் காணொளி வாயிலாக வழக்கு விசாரணையில் கலந்து கொண்டிருந்தார்.