பாடசாலைகளில் நிதி சேகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

user 11-Feb-2026 இலங்கை 102 Views

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்காக மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி சேகரிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது.

ஆனால், தற்போதைய நிலையில் இவ்வாறான நிதி சேகரிப்புகளுக்கு அனுமதி இல்லை.

நிதி வழங்கக் கோரி சில குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளும் அழுத்தங்களால் மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளானால், மாணவர்களின் நலன் கருதி அதில் தலையிடும் அதிகாரம் கல்வி அமைச்சுக்கு உண்டு

பாடசாலைகளுக்கு ஆதரவளிக்க விரும்பும் பெற்றோர் அல்லது பழைய மாணவர் குழுக்கள் தன்னிச்சையாக (Voluntary) வழங்கும் பங்களிப்புகளைத் தடுக்க முடியாது.

இருப்பினும், இதுவரை இது தொடர்பாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அனைத்துப் பாடசாலைகளுக்கும் 'ஸ்மார்ட் போர்டுகள்' (Smartboards) கட்டாயமானவை அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் பாடசாலைகளில் தற்போதுள்ள வசதிகளைக் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட முடியும்.

செய்முறைப் பயிற்சி மற்றும் செயற்பாடுகளை மையமாகக் கொண்ட கற்றல் முறைகளுக்கே புதிய சீர்திருத்தங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

பிரபலமான செய்தி