மன்னார் கடலில் 50 கி.கி. ஹஷிஷ் போதைப்பொருள் மீட்பு

user 15-Feb-2026 இலங்கை 58 Views

மன்னார் தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் இன்று (14) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 50 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹஷிஷ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, மன்னார் தெற்கு கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகு (Dinghy) ஒன்றினை கடற்படையினர் வழிமறித்துச் சோதனையிட்டனர்.

இதன்போது, குறித்த படகில் கடத்தப்பட்ட இரண்டு பாரிய பொதிகளைக் கடற்படையினர் கைப்பற்றியதுடன், அதிலிருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட டிங்கி படகு மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் தல்பாடு இறங்குதுறைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் (PNB) முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் நிபுணத்துவ சோதனைகளின் போது, குறித்த பொதிகளில் 50 கிலோகிராமுக்கும் அதிகமான ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் டிங்கி படகுடன் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Post

பிரபலமான செய்தி