Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஈரான் – அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து; போர் பதற்றம் தணியுமா?

18 Jun 2026, 02:37 PM
பார்வைகள்: 111
ஈரான் – அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து; போர் பதற்றம் தணியுமா?

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜி7 உச்சி மாநாட்டை அடுத்து வெர்சாய் அரண்மனையில் நடைபெற்ற இரவு விருந்தின் போது, ஒப்பந்தத்தின் பிரதியில் டிரம்ப் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, அமெரிக்காவுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார்.இவ்வொப்பந்தம் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்றங்களை குறைப்பதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுவதுடன், அதன் முழுமையான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.