Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
விளையாட்டு

இரண்டாவது T20 போட்டியிலும் பாகிஸ்தான் அபார வெற்றி: 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி!

12 Oct 2026, 10:55 AM
பார்வைகள்: 867
இரண்டாவது T20 போட்டியிலும் பாகிஸ்தான் அபார வெற்றி: 82 ஓட்டங்களால் இலங்கை தோல்வி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (11) நடைபெற்ற இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மாஸ் சதாகத் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

இதனையடுத்து, 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் மஹேஷ் தீக்ஷன அதிகபட்சமாக 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்று, இரண்டாவது T20 போட்டியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.