Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

இஸ்ரேல் தேர்தல்: வெளிநாட்டு நிதியுதவி குற்றச்சாட்டை நிராகரித்த எதிர்க்கட்சிகள்

30 Oct 2026, 02:56 PM
பார்வைகள்: 246
இஸ்ரேல் தேர்தல்: வெளிநாட்டு நிதியுதவி குற்றச்சாட்டை நிராகரித்த எதிர்க்கட்சிகள்

இஸ்ரேல் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தலையீடு மற்றும் நிதியுதவி தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் உள்ளிட்ட தலைவர்கள், தேர்தல் தோல்விக்கு வெளிநாட்டுத் தலையீட்டைக் காரணமாகக் கூறிய நெதன்யாகுவின் கருத்துக்களை விமர்சித்துள்ளனர்.

இஸ்ரேலின் அரபு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தேர்தலைத் திருடியதாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், குறித்த கட்சிகள் கத்தார் மற்றும் துருக்கியிடமிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றனவா என்பது தொடர்பில் இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெத் விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையில், இஸ்ரேலியத் தலைவர்களின் குற்றச்சாட்டுகளை அபத்தமானவை மற்றும் ஆபத்தானவை எனக் குறிப்பிட்ட கத்தார் வெளியுறவு அமைச்சகம், அவற்றை நிராகரித்துள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணிக்கும் யூத எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், அரபு வாக்காளர்களின் அதிகரித்த பங்களிப்பைத் தொடர்ந்து, ஜாயின்ட் லிஸ்ட் மற்றும் ராம் ஆகிய அரபுக் கட்சிகள் இணைந்து நாடாளுமன்றத்தில் 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.இதனால், இஸ்ரேலில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகளில் அரபுக் கட்சிகள் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.