Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

குழந்தையை நெஞ்சில் சுமந்தபடி அரை மாரத்தானில் பங்கேற்ற காஷ்மீர் தாய்

30 Oct 2026, 03:16 PM
பார்வைகள்: 262
குழந்தையை நெஞ்சில் சுமந்தபடி அரை மாரத்தானில் பங்கேற்ற காஷ்மீர் தாய்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில், தனது ஒரு வயது குழந்தையை உடலோடு கட்டிக்கொண்டு ஓடிய 34 வயதான குல்சூம் பானோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் அவர் குழந்தையுடன் பங்கேற்ற புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.ஸ்ரீநகரில் நடைபெற்ற இம்மாரத்தான் போட்டியில் 42.195 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட முழு மாரத்தான் மற்றும் 21 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அரை மாரத்தான் என இரண்டு பிரிவுகள் இடம்பெற்றன. இதில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஸ்ரீநகரின் போலோ மைதானத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.குழந்தையுடன் போட்டியில் பங்கேற்ற குல்சூம் பானோவின் செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாரத்தானில் பங்கேற்க அவர் எடுத்த முடிவுக்குப் பின்னால் தனிப்பட்ட அனுபவங்களும் விடாமுயற்சியும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.