Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

மான் தாக்கி புனர்வாழ்வு பெற்றுவந்த கைதி உயிரிழப்பு

09 Nov 2026, 12:11 PM
பார்வைகள்: 23
மான் தாக்கி புனர்வாழ்வு பெற்றுவந்த கைதி உயிரிழப்பு

 வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாகத் திரிந்த மான் ஒன்று அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த அவர் தெம்பரகவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வரபலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் தெம்பரகவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (09) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.