Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கண்டி – குண்டசாலை புதிய நகரில் வீடு தீக்கிரை; பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

10 Nov 2026, 10:55 AM
பார்வைகள்: 18
கண்டி – குண்டசாலை புதிய நகரில் வீடு தீக்கிரை; பெண் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, குண்டசாலை புதிய நகரில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பரவிய சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் தங்கியிருந்த 34 வயதுடைய பெண்ணொருவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர் வெளிநாடொன்றில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகரும் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.