Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் டிரோன் தாக்குதல்.

19 Jun 2026, 12:18 PM
பார்வைகள்: 368
மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் டிரோன் தாக்குதல்.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை குறிவைத்து உக்ரைன் மீண்டும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.தாக்குதலின் காரணமாக மாஸ்கோ விமான நிலையங்களின் வர்த்தக விமான சேவைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷியா மீது இதுவரை நடத்தப்பட்ட மிகப் பெரிய டிரோன் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் தெரிவிக்கையில், தலைநகரை நோக்கி வந்த சுமார் 200 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் கூறினார். அதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே இரவில் 555 உக்ரைன் டிரோன்களை ரஷிய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா–உக்ரைன் போர் நான்காவது ஆண்டையும் கடந்தும் தொடர்கிறது. போரின் காரணமாக இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி, போரில் டிரோன்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஆண்டில் 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி உக்ரைன் முன்னேறி வருவதாகவும், தேவை ஏற்பட்டால் ஆண்டுக்கு 20 மில்லியன் டிரோன்கள் வரை உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நாட்டுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்துவதும், வெளிநாட்டு ஆயுத விநியோகங்களின் மீதான சார்பைக் குறைப்பதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன.