Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

வாட்ஸ் அப்பில் புதிய ‘கஸ்டம் லிஸ்ட்’ வசதி: பயனர்களுக்கு எளிதான உரையாடல் மேலாண்மை

19 Jun 2026, 12:46 PM
பார்வைகள்: 655
வாட்ஸ் அப்பில் புதிய ‘கஸ்டம் லிஸ்ட்’ வசதி: பயனர்களுக்கு எளிதான உரையாடல் மேலாண்மை

உலகளவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி, பயனர்களின் உரையாடல்களை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய “கஸ்டம் லிஸ்ட்” (Custom Lists) வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.தனிப்பட்ட உரையாடல்கள், குடும்பக் குழுக்கள், தொழில்சார் தகவல் பரிமாற்றங்கள், பாடசாலை மற்றும் வாடிக்கையாளர் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு உரையாடல்கள் ஒரே இடத்தில் குவிவதால், தேவையான தகவல்களைத் தேடுவதில் பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகவே புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்களின் உரையாடல்களை “குடும்பம்”, “வேலை”, “நண்பர்கள்”, “வாடிக்கையாளர்கள்” போன்ற தனித்தனி பட்டியல்களாகப் பிரித்து நிர்வகிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த உரையாடல்களை விரைவாகக் கண்டறிய முடிவதுடன், தேவையற்ற தேடல்களும் குறையும்.இந்த வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ் அப் சாட்ஸ் பகுதியில் கீழ்நோக்கி ஸ்வைப் செய்தால் “லிஸ்ட்” (Lists) என்ற தெரிவு காணப்படும். அதில் புதிய பட்டியலை உருவாக்கி, அதற்குரிய உரையாடல்களை இணைத்துக்கொள்ளலாம். பின்னர் அந்தப் பட்டியலைத் தேர்வு செய்வதன் மூலம், அதனுடன் தொடர்புடைய உரையாடல்கள் மட்டும் தனியாகக் காட்சியளிக்கும்.இந்த புதிய அம்சம் பெறப்படும் செய்திகளின் எண்ணிக்கையைக் குறைக்காது என்றாலும், அவற்றை ஒழுங்குபடுத்தி முக்கியமான தகவல்களை முன்னுரிமையுடன் கவனிக்க உதவும் என தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ் அப்பின் அன்றாட பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் பயனுள்ள புதுப்பிப்பாக இது கருதப்படுகிறது.