Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தை: முதல் சுற்று வெற்றிகரமாக நிறைவு

23 Jun 2026, 02:03 PM
பார்வைகள்: 490
அமெரிக்கா–ஈரான் அமைதி பேச்சுவார்த்தை: முதல் சுற்று வெற்றிகரமாக நிறைவு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புதிய தூதரக பேச்சுவார்த்தை கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி ஆரம்ப ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, 60 நாட்களுக்குள் இறுதி விரிவான ஒப்பந்தத்தை எட்ட இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன. இதன் முதல் சுற்று பேச்சுவார்த்தை ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவும் பங்கேற்றன.பேச்சுவார்த்தைக்கு முன், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் ஈரான் குழு வெளிநடப்பு செய்தது. பின்னர் நிலைமை சீரமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரப்பட்டது.பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய மத்தியஸ்த நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இரு தரப்பும் 14 அம்சங்களை கொண்ட இறுதி ஒப்பந்தத்துக்கான திட்டப்படத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. அடுத்த 60 நாட்களில் பேச்சுவார்த்தைகளை தொடரவும், ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல தேவையான தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.