Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: உயிரிழப்பு 164 ஆக உயர்வு

26 Jun 2026, 02:45 PM
பார்வைகள்: 392
வெனிசுலாவில் இரட்டை நிலநடுக்கம்: உயிரிழப்பு 164 ஆக உயர்வு

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.இந்த அனர்த்தத்தில் இதுவரை 971 பேர் காயமடைந்துள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, மொண்டல்பான் பகுதியில் இருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களால் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இதனையடுத்து, ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது. இந்த இரண்டாவது அதிர்வால் தலைநகரில் உள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை நிலநடுக்கங்களின் தாக்கத்தையடுத்து, வெனிசுலா மற்றும் அதனைச் சூழவுள்ள கரீபியன் தீவுப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.