Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

பாகிஸ்தானில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி; 3 பேரை தேடும் பணி தீவிரம்

02 Jul 2026, 02:49 PM
பார்வைகள்: 216
பாகிஸ்தானில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி; 3 பேரை தேடும் பணி தீவிரம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான அப்பர் ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சைபுல்லா ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் மாயமாகியுள்ளனர்.பொலிஸார் தெரிவித்ததன்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஏரியில் படகுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.

மீட்புப் பணிகளின் போது 6 பேரின் சடலங்கள் ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 3 பேரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்கள் அனைவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், படகு கவிழ்ந்ததற்கான சூழ்நிலைகள் தொடர்பிலும் மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.