Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

நேட்டோ உச்சிமாநாடு இன்று அங்காராவில் தொடக்கம்; பாதுகாப்பு, உக்ரைன், ராணுவ முதலீடு முக்கிய விவாதங்கள்

07 Jul 2026, 11:40 AM
பார்வைகள்: 41
நேட்டோ உச்சிமாநாடு இன்று அங்காராவில் தொடக்கம்; பாதுகாப்பு, உக்ரைன், ராணுவ முதலீடு முக்கிய விவாதங்கள்

நேட்டோ (NATO) கூட்டணியின் 2026ஆம் ஆண்டுக்கான உச்சிமாநாடு இன்று (ஜூலை 7) துருக்கியின் தலைநகர் அங்காராவில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 32 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய கூட்டாளி நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் மாநாட்டில் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரித்தல், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புப் பொறுப்புகளை வலுப்படுத்துதல், உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு, ராணுவ உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் கூட்டணியின் எதிர்கால பாதுகாப்பு வியூகங்கள் ஆகியவை முக்கிய விவாதப் பொருள்களாக இடம்பெறவுள்ளன.மேலும், நேட்டோ வரலாற்றில் முதல் முறையாக பாதுகாப்புத் தொழில்துறை மன்றமும் (NATO Summit Defence Industry Forum) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு உற்பத்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் புதிய ராணுவ திட்டங்கள் குறித்து அரசுகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் கலந்துரையாடவுள்ளன.மாநாட்டின் போது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான தனி அமர்வுகளும் நடைபெறவுள்ளன. அதேவேளை, இந்தோ-பசிபிக் பிராந்திய கூட்டாளிகள் மற்றும் உக்ரைன் தொடர்பான உயர்மட்ட சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன. மாநாட்டின் நிறைவில் கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் முக்கிய முடிவுகள் அடங்கிய கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.