Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

சீனாவில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 20-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

08 Jul 2026, 03:04 PM
பார்வைகள்: 145
சீனாவில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 20-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

சீனாவின் பல மாகாணங்களில் தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், பல பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசரகால சேவைப் பிரிவுகள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேலும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் நிலவுவதாக சீன வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.