Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட 18 மாத குழந்தை பிணவறையில் உயிருடன் கண்டுபிடிப்பு: அமெரிக்காவில் பரபரப்பு

08 Jul 2026, 03:10 PM
பார்வைகள்: 202
இறந்ததாக அறிவிக்கப்பட்ட 18 மாத குழந்தை பிணவறையில் உயிருடன் கண்டுபிடிப்பு: அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், நீச்சல் குளத்தில் மூழ்கியதாகக் கருதப்பட்ட 18 மாத குழந்தை மருத்துவர்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், பல மணி நேரங்கள் கழித்து மருத்துவமனையின் பிணவறையில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் கில்பர்ட் பகுதியில் உள்ள வீட்டின் நீச்சல் குளத்தில் மயக்கநிலையில் மீட்கப்பட்ட குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததாகக் கூறி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்தார்.

இதையடுத்து, சுமார் ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகு உடற்கூறாய்வு நடைமுறைகளுக்காக பிணவறைக்கு கொண்டுசெல்லப்பட்ட குழந்தை மூச்சுவிடுவதை மருத்துவப் பரிசோதகர் கவனித்ததைத் தொடர்ந்து, உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு விமானம் மூலம் மாற்றி மேலதிக சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை தற்போது உயிர் பிழைத்துள்ளதுடன், அதன் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை உள்நாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், சிகிச்சை நடைமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேவேளை, குழந்தை நீச்சல் குளத்தில் மூழ்கிய சம்பவம் தொடர்பாக அதன் பெற்றோருக்கு எதிராக அலட்சிய குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென காவல்துறை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.