Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உலகம்

ஆஸ்திரேலிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைத்த பிரதமர் மோடி

09 Jul 2026, 11:13 AM
பார்வைகள்: 169
ஆஸ்திரேலிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைத்த பிரதமர் மோடி

மூன்று நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற இந்தியா–ஆஸ்திரேலியா வணிக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழலை எடுத்துரைத்தார்.இந்தியாவில் உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் முக்கிய கனிம வளங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களை அவர் அழைத்தார். மேலும், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (CECA) விரைவில் நிறைவேற வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தப் பயணத்தின் போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்தும் வகையில் ஆலோசனைகள் நடைபெறுகின்றன.