முல்லைத் தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலவரம்!

user 14-Nov-2024 இலங்கை 1795 Views

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் செயற்பாடுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இம்முறை முல்லைத் தீவு மாவட்டத்தில் 86869 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனவும், வாக்களிப்பதற்காக  137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றதுடன் தேர்தல் கடமையில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கக்  கூடியதாக உள்ளது.

Related Post

பிரபலமான செய்தி