மீளமைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை !

user 05-Dec-2024 இலங்கை 1283 Views

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) கொழும்புக் கிளை நேற்று (04) மீளமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கொழும்புக் கிளையின் முன்னாள் செயலாளர் சி.இரத்தினவடிவேல் தலைவராகவும், மலர்விழி சிங்காரநாதன் செயலாளராகவும், முத்துக்குமாரசாமி பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐவர் மத்திய செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளும்னற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.

Related Post

பிரபலமான செய்தி