தேங்காய் சம்பல் வழங்காத உணவகங்கள் !

user 09-Dec-2024 இலங்கை 748 Views

நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் குழம்பு(பால் சொதி) வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில  இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்சான்(Harshana Rukshan) தெரிவித்துள்ளார். சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தையில் தற்போது ஒரு தேங்காயின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அரிசி, முட்டை, உப்பு மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என்றும் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பினால் மதிய உணவுப் பொதி தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை,  நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலை1,200 ரூபாவில் இருந்து 1,280 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

 

Related Post

பிரபலமான செய்தி