சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று பிடித்த பொலிஸார் !

user 19-Dec-2024 இலங்கை 1284 Views

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று பருத்தித்துறை(Point Pedro) பொலிஸார் நேற்றையதினம்(18) கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை- வல்லிபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை பொலிஸார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

அதனை மதிக்காது கனரக வாகனம் நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது. இந்நிலையில் சுமார் நாற்பது கிலோமீட்டர் வரை குறித்த கனரக வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர்.

இதன்போது கனரவானகத்தின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த கனரக வாகனத்தை பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, நேற்று முன்தினமும் நேற்றுமாக சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பான தீவிர விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி