டெல்லியில் காற்றின் தரக்குறியீட்டில் பாதிப்பு !

user 10-Jan-2025 இந்தியா 638 Views

நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறதுடன் குறிப்பாக வட இந்தியாவில் இந்த காலத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது

அதன்படி, வட இந்தியாவில் இப்போது குளிர்காலம் நிலவி வருவதால் அங்குக் கடுமையான மூடுபனி நிலவுகிறது. இதனால் டெல்லியில் இன்று மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று காலை 6 மணி அளவில் 408 ஆக பதிவாகியுள்ளதுடன் இது மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுபடி, மிகவும் மோசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

மேலும் வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடர்ந்த மூடுபனி காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து மற்றும் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி