13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு!

user 29-Jan-2025 இலங்கை 395 Views

யாழ்ப்பாணம், வெல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கைது நடவடிக்கையின் போது, கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு மீனவர்களும் தற்போது வைத்தியயசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று (28) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்ட போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்தியா எடும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தது.

Related Post

பிரபலமான செய்தி