இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் (Benjamin Netanyahu) அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்தங்களின் பின்னர், காசா பகுதிக்கு விஜயம் செய்யும் முதல் அமெரிக்க மத்திய கிழக்கு தூதராக விட்காஃப் கருதப்படுகிறார்.
இஸ்ரேலியப் படைகளால் தாம் அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டதாகவும், காசா பகுதியைப் பிரிக்கும் நெட்சாரிம் தாழ்வாரத்தை இஸ்ரேலிய மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மருடன் பார்வையிட்டதாகவும் விட்காஃப் கூறியுள்ளார்.
இதேவேளை, பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald John Trump) சந்திக்க திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் நாட்டின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக அவர் வோஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.