வாக்களித்தவர்களாலேயே துரத்தி அடிக்கபடுவீர்கள்!

user 05-Mar-2025 இலங்கை 243 Views

''எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்கு வாக்களித்த மக்களே உங்களை விரட்டி அடிப்பார்கள்'' என அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''அரசாங்கம் தமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மாத்திரமே மலையக மக்களின் வாக்குகளை பயன்படுத்தியுள்ளது.

அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முதுகெலும்பு இல்லாதவர்கள் என அம்மக்களே உங்களை விரட்டி அடிப்பார்கள்.

கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு 2136 ரூபாய் வழங்குவதே போதாது என எதிர்த்தவர்களின் அரசாங்கம் இன்று அவர்களுடைய வரவு செலவு திட்டத்தில் 1700 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாக கூறியவர்கள் ஏன் அதை மலையக மக்களுக்கு செய்யவில்லை.'' என கேள்வி எழுப்பியுள்ளார்.   

Related Post

பிரபலமான செய்தி