ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை..!

user 06-Mar-2025 சர்வதேசம் 244 Views

அனைத்து பணயக்கைதிகளையும் இப்போதே விடுவிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸ் அமைப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

ஹமாஸ் அமைப்பினருடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாக சர்வதேச ரீதியில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இதற்கிடையில், ட்ரம்ப், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஹமாஸ் அமைப்புக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக பதிவு ஒன்றினை இட்டுள்ளார். 

குறித்த பதிவில், " 'ஷாலோம் ஹமாஸ் - Shalom Hamas' என்றால் வணக்கம் அல்லது விடைபெறுதல் என்று அர்த்தம், எனவே நீங்களே எது வேண்டும் என தெரிவு செய்யுங்கள்.

பணயக்கைதிகள் அனைவரையும் இப்போதே விடுவித்து விடுங்கள், பின்னர் அல்ல, நீங்கள் கொலை செய்த மக்களின் அனைத்து இறந்த உடல்களையும் உடனடியாகத் திருப்பி அனுப்புங்கள். 

இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்தையும் நான் அனுப்பக் கொண்டிருக்கின்றேன். எனவே, நான் சொல்வது போல் நீங்கள் செய்யாவிட்டால் ஒரு ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்.

Related Post

பிரபலமான செய்தி