சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் !

user 11-Mar-2025 இலங்கை 250 Views

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போதும் கடந்த 2 வருடங்களாக இடமாற்றம் பெற்றுச் செல்லாமல் தொடர்ந்தும் அங்கேயே பணியாற்றுவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த வைத்தியர் செல்வாக்கைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்லாமல் இருப்பதாகவும் அர்ச்சுனா இதன்போது சுட்டிக்காட்டினார்.

வைத்தியர் இடமாற்றமாகி செல்லாததனால் மன்னார் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கான வைத்தியர் இன்றி அந்த மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வைத்தியரை விரைவாக இடமாற்றுமாறு சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி