மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி செம்பியனானது இந்திய அணி !

user 17-Mar-2025 விளையாட்டு 277 Views

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்திய அணி(India)  அபார வெற்றி பெற்று செம்பியன் பட்டம் வென்றுள்ளது.

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தன.

இந்நிலையில், ராய்ப்பூரில் நேற்று(16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்(WI) அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி  துடுப்பாட்டத்தை தேர்வுசெய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் டுவைன் சுமித் 45 ஓட்டங்கள், சிம்மன்ஸ் 57 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் வினய் குமார் 3 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 149 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.அவர் 50 பந்தில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்தியா 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 149 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று செம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஆட்ட நாயகன் விருது அம்பதி ராயுடுவுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி