இந்தியாவில் 20 வருடமாக அரங்கேறிய கொடூரம் !

user 18-Mar-2025 இந்தியா 267 Views

20 வருடமாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பல மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து காணொளி எடுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில் குறித்த பேராசிரியர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த முதுகலை கல்லூரியில் புவியியல் துறையின் தலைவராக (HOD) உள்ள ரஜ்னீஷ் குமார் (59 வயது) என்ற பேராசிரியரே இந்த குற்றத்தை புரிந்தவராவார்.

இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அக்கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதை காணொளி எடுத்தும் வந்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் காவல்துறை நடவடிக்கை எடுப்பதை அறிந்ததும், ரஜ்னீஷ் குமார் தலைமறைவாகியுள்ளார்.

மாணவிகளுக்கு பரீட்சையில் நல்ல கிரேட் தருவது, வேலை வாங்கி தருவது ஆகிய ஆசைகளை காட்டி பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் இந்த செயல்களில் 20 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வந்ததாக ஹத்ராஸ் மாவட்டகாவல்துறை பொறுப்பதிகாரி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தலைமறைவான பேராசிரியர் ரஜ்னீஷ் சின்ஹாவை தேடும் பணியில் ஹத்ராஸ் காவல்துறை ஈடுபட்டுள்ளது.   

 

 

Related Post

பிரபலமான செய்தி