சந்தேகத்திற்கிடமாக தலைக்கவசம் அணிந்து நடமாடுவோர் சோதனை

user 24-Apr-2025 இலங்கை 79 Views

பாதுகாப்பு தலைக்கவசங்களை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்வது அவசியமென பொலிஸ் தலைமையகம் ஊடாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களின் போது பெரும்பாலான சந்தேகநபர்கள் தலைக்கவசம் அணிந்து வந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

 

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது மாத்திரமே தலைக்கவசம் அணிய வேண்டிய தேவையேற்படுகிறது.

இதனால் மோட்டார் சைக்களில் பயணம் செய்யாத சந்தர்ப்பத்தில் தலைக்கவசம் அணிந்து சந்தேகமான முறையில் நடமாடும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்ய வேண்டியது அவசியமென பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

 

Related Post

பிரபலமான செய்தி