2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்....

user 29-Apr-2025 இலங்கை 51 Views

இந்த ஆண்டு தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மே 10-16 ஆம் திகதி தேசிய வெசாக் வாரமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (29) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

 

நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிவணக்கத்திற்குரிய பௌத்த பிக்குமார்கள் மற்றும் ஒட்டுமொத்த புத்தசாசனப் பேரவையின் ஆலோசனையின் பிரகாரம் 2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவம் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் பௌத்த விவகாரங்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தவுள்ளது.

இவ்வாண்டு அரச வெசாக் மகோற்சவம் ‘ஹஜெத மித்தே கல்யாண – ஹஜெத புரிசுத்தமே’ (நற்குணங்கள் கொண்ட உன்னத நண்பர்களுடன் பழகுவோம்) எனும் தொனிப்பெருளின் கீழ் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையை மையமாகக் கொண்டு தேசிய வெசாக் மகோற்சவத்தை நடாத்துவதற்கும், 2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும், குறித்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த மத நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related Post

பிரபலமான செய்தி