Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் ஆடிவேல் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

21 Jul 2026, 02:47 PM
பார்வைகள்: 92
கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் ஆடிவேல் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

வரலாற்றுப் புகழ்பெற்ற கதிர்காம கந்தன் ஆடிவேல் திருவிழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வான கொடியேற்ற விழா, இன்று (20.07.2026) காலை கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் சைவ மரபுப்படி சிறப்பாக நடைபெற்றது.

ஆடிவேல் உற்சவத்தின் ஆறாம் நாளில் நடைபெறும் இந்த கொடியேற்ற நிகழ்வில், தெய்வானை அம்மன் ஆலயத்திற்கு உரிய காவி நிற சேவல் கொடி, ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள தேக்கு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கதிர்காமத்தின் சைவ மரபில், தெய்வானை அம்மன் ஆலயத்தில் ஏற்றப்படும் சேவல் கொடியே கதிர்காம கொடியேற்றமாகக் கருதப்படுகிறது.

கொடியேற்றத்திற்கு முன்னதாக, ஆலய பீடாதிபதி தலைமையில் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் சந்நிதியான் ஆசிரம முதல்வர் கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகள் உள்ளிட்ட மதகுருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

புகைப்பட தொகுப்பு (Gallery)