Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

23 Jul 2026, 11:29 AM
பார்வைகள்: 155
டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு டீ விழா விருந்தினர் விடுதி அருகே இன்று (23) அதிகாலை பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால், பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மரம் வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்கே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஹட்டனிலிருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கிப் பயணித்த வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

சம்பவம் தொடர்பான தகவலைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நோர்வூட் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மரம் முழுமையாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, பிரதான வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியதாக ஹட்டன் வலய காவல்துறைத் தலைமையக அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.