Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறவுள்ளது

23 Jul 2026, 12:07 PM
பார்வைகள்: 192
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறவுள்ளது

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) தள்ளுபடி செய்துள்ளது.

மனுதாரர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை விரிவாக பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.

பரீட்சைக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் காரணமாகக் காட்டி, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

எனினும், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.

இதன் மூலம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.