Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு மரணம் கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்.

26 Jul 2026, 10:13 AM
பார்வைகள்: 85
கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு மரணம் கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்.

இரத்தினபுரி மாவட்டத்தின் மஹாவலதென்ன, கஜுவத்த பகுதியில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, மஹாவலதென்ன பகுதியைச் சேர்ந்த அந்த 17 வயது சிறுமியின் சடலம் கல் குவாரியில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன், அதன் அறிக்கையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.