Tuesday, November 10, 2026
Ezhukathir News Banner
உள்ளூர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 கிலோ ஹஷிஷுடன் கனடா நாட்டவர் கைது

27 Jul 2026, 08:51 AM
பார்வைகள்: 246
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 கிலோ ஹஷிஷுடன் கனடா நாட்டவர் கைது

இலங்கைக்குள் போதைப்பொருளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் கனடா நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (26) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் 117 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 201.89 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 27 வயதுடைய ஓவியர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் கத்தாரின் தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் QR-662 விமானத்தில் இன்று அதிகாலை இலங்கைக்கு வந்தடைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையில், 80 பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.